நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்ட சா்வதேச மகளிர் தினம்
மகளிர் விவகார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, கிண்ணியா பிரதேச செயலகத்தால் ஒரு வார காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வந்த சா்வதேச மகளிர் தினத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று (8) இடம்பெற்றுள்ளன.
இதன்போது, பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான 2025 ஆம் ஆண்டின் சிறப்பு பெண்மணிகளாக கிராம சேவகர் பிரிவு ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 17 பேர் சான்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பிரதேச செயலகத்தில் சிறப்பாக கடமையாற்றிய பெண் ஊழியர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு பெண்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
இதேவேளை, கிழக்கு மாகாண சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றுள்ளன.
களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளன.
இதன்போது பல்வேறு கஸ்டங்களுக்கும் மத்தியில் சாதணை படைத்த ஆறு பெண்கள் இதன்போது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கஸ்ட நிலையிலும் முன்னேற்றப்பாதையில் சென்ற பெண்களின் அனுபவ பகிர்வும் நடைபெற்றதுடன் மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சுதந்திரம் அவர்களினால் சரியாக பயன்படுத்தபடுகின்றது?பயன்படுத்தப்படவில்லை என்னும் தலைப்பில் விசேட பட்டிமன்றமும் நடத்தப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்: குமார்
சுதந்திரப் பறவைகளின் பன்னாட்டு மகளிர் தின நிகழ்வு கூட்டுறவு மண்டபத்தில் 08.03.2025 இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சி.வி.கே சிவஞானம் ஆகியோர்கள் பிரதமர் அதிதிகளாக கலந்து கொண்டு பன்னாட்டு மகளிர் தினத்தை சிறப்பித்துள்ளனர்.
மேலதிக தகவல்: சுப்ரமணியம் தேவந்தன்
you may like this..



