பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி நெறி
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நான்காவது கிளை அலுவலகம் இன்றையதினம் யாழ்ப்பாணம், அரியாலையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய கட்டிடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமானது.
பெண்களின் வாழ்வாதார மேம்பாடு
அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன், பிரதம அதிதியாக கலந்து கொண்ட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவர்கள் நாடா வெட்டி புதிய கிளை அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.
புதிய கிளை அலுவலகத்தின் ஊடாக பெண்களுக்கான தையல் பயிற்சி, ஆரி வேலைப்பாடு, கேக் ஐசிங், அழகுக்கலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சி வகுப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் கிறிஸ்தோபர் எமி (கனடா ) அவர்களின் நிதி அனுசரணையில் தையல் பயிற்சி நெறி முதற்கட்டமாக இன்றையதினம் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பெண்களுக்கு தொழில்திறன்களை வழங்கி அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் தன்னம்பிக்கையையும் உயர்த்தும் நோக்கில் இந்த இலவச கற்கைநெறிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதன் ஒரு பகுதியாக ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் நான்காவது கிளை அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் யாழ் மாவட்ட உத்தியோகத்தர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தனிமனித மேம்பாட்டு வழிநடத்துனரும் பத்மஷாலா நல்வாழ்வு நிறுவனத்தின் நிறுவுனருமான நளினாசினி அம்பிகைபாகன், வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் நிறுவனர் தரன் ஶ்ரீ, வன்னி தமிழீழ மக்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் நிரூபன் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 9 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam