பெண்களின் இலட்சியங்களுக்கு வரம்புகள் இருக்கக்கூடாது : ரேச்சல் ரீவ்ஸ்
பெண்களின் இலட்சியங்களுக்கு வரம்புகள் இருக்கக்கூடாது என பிரித்தானியாவின் முதல் பெண் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள 45 வயதான ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றின் மூலமாக கூறியுள்ளார்.
பொருளாதார மாற்றம்
இது தெடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டது எனது வாழ்வின் பெருமையாகும். இது என்ன பொறுப்பைக் கொண்டுவருகிறது என்பதை நான் அறிவேன்.
It is the honour of my life to have been appointed Chancellor of the Exchequer.
— Rachel Reeves (@RachelReevesMP) July 5, 2024
Economic growth was the Labour Party’s mission. It is now a national mission.
Let’s get to work. pic.twitter.com/PchJFePDJa
மேலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களைச் சிறந்தவர்களாக மாற்றுவதற்கு நமது பொருளாதாரத்திற்குத் தேவையான மாற்றத்தை வழங்க நான் தயாராக இருக்கிறேன்.
அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற வரலாற்றுப் பொறுப்புடன் வருகிறது.
இதைப் படிக்கும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும் பெண்களுக்கும், உங்கள் இலட்சியங்களுக்கு வரம்புகள் இருக்கக்கூடாது என்பதை இன்று காட்டட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |