கொமர்ஷல் வங்கியினால் நடாத்தப்பட்ட மகளிர் தின நிகழ்வுகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு கொமர்ஷல் வங்கியினால் மகளிர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, இன்று (13.03.2024) முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
அத்துடன், மகளிர் தினத்தை முன்னிட்டு கொமர்ஷல் வங்கி முள்ளியவளைக் கிளையினால், முல்லைத்தீவு கல்வி வலயத்துடன் இணைந்து வினாடி வினா போட்டி ஒன்று கடந்த வாரம் நடாத்தப்பட்டுள்ளது.
பிரதம விருந்தினர்
இதனடிப்படையில், மகளிர் தினத்துடன் வினாடி வினா போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றுள்ளது.
கொமர்ஷல் வங்கி முள்ளியவளை கிளையின் முகாமையாளர் செல்வரத்தினம் தினேசன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளதோடு நிகழ்வின் பிரதம விருந்தினராக கொமர்ஷல் வங்கியின் வட பிராந்திய முகாமையாளர் அருளம்பலம் ஜெயபாலன் பங்குபற்றியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |