வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டிணைவில் கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிப்போம் எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டிணைவில் கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, இன்று (12-03-2024) நடைபெற்றுள்ளது.
பெண்களுக்கு எதிரான அடக்குமுறை
வடக்கு - கிழக்கின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கிளிநொச்சி பழைய கச்சேரி முன்றலில் இருந்து இருந்து பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்து விழிப்புணர்வு பேரணியாக கிளிநொச்சி பசுமை பூங்கா வளாகத்தை சென்றடைந்துள்ளனர்.

இதன்போது பெண்களின் அடக்கு முறைகளை எதிர்த்து துணிவுடன் நிமிர்வோம் எனும் உருதிமொழியுடன் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளன.
யுத்தம் மற்றும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கோரியும், பால்நிலை சாத்துவம், உரிமைகளை வலியுறுத்தியும் கவனயீர்ப்பு பேரணி A9 வீதி ஊடாக பசுமை பூங்காவை சென்றடைந்தது.

தொடர்ந்து, பசுமைப் பூங்காவில் 2024ம் ஆண்டு மகளீர் தின நிகழ்வு பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் ஆரம்பமானது.
சுடரேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில், பெண்களின் உரிமை, பால்நிலை
சமத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி கருத்தரங்குகளும்
இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும்
கலந்துகொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam