பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மோசமான செயல்! யுவதிக்கு நேர்ந்த விபரீதம்
சமனலவெவ பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரினால் 18வயதுடைய இளம் யுவதி பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை (06.04.2023) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இளம் காதல் ஜோடி
சமனலவெவ அணைக்கட்டுக்கு அருகில் உள்ள சூழலை பார்வையிடுவதற்காக சென்ற காதலர்களின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி தான் பொலிஸ் அதிகாரி என்றும் போதைப்பொருள் இருக்கின்றதா என்பது தொடர்பில் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறி பொலிஸ் அடையாள அட்டையை காண்பித்துள்ளார்.
இருவரையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டுமெனக்கூறி, மோட்டார் சைக்கிளுடன் அவ்விளைஞனுக்கு கைவிலங்கு இட்டுள்ளார்.
அதன்பின்னர், அந்த யுவதியை பற்றைக்காட்டுக்குள் இழுத்துச் சென்று நிர்வாணமாக்கி, துஸ்பிரயோகம் செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்பின்னர், தன்னுடைய கையடக்க தொலைபேசியில் அந்த 18 வயதான யுவதியை படம்பிடிக்க முயற்சித்துள்ளார்.
இது தொடர்பில் சமனலவெவ பொலிஸாருக்கு நபர் ஒருவர் வழங்கிய தொலைபேசி அழைப்பின் பிரகாரம் பொலிஸார் உடனடியாக செயற்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டு பலாங்கொடை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று (08.04.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும் பிள்ளையொன்றின் தந்தை என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபரை பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.