யுவதியை கடத்தி சென்று வன்புணர்வு செய்த நால்வர்
கண்டியில் புத்தர் சிலைக்கு அருகில் 18 வயதான யுவதி ஒருவரை முச்க்கர வண்டியில் வந்த 4 பேர் கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
கடுகன்னாவ பொத்தபிட்டிய பகுதியில் வைத்து அவரை துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஒருவர் கைது

யுவதியை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியிலேயே அவரை ஒருவர் முதலில் பாலியல் வன்புணர்வு செய்த நிலையில் ஏனைய மூவரும் அவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நான்கு பேரும் ஒரு வகையான போதை பொருள் பயன்படுத்தி போதை நிலையில் இருந்ததாக யுவதி பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் ஒருவர் தற்போது வரையிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri