இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சமமான சமூக சூழலை உருவாக்க வேண்டும் பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை!
சூழல் மற்றும் சமூகத்தின் அபிவிருத்தியை வலுவூட்டும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் சமூக மட்டத்தில் சேவைகளை வழங்கிவரும் அமைப்புக்களின் பெண் பிரதிநிதிகளை அழைத்து மகளீர் தின கலந்துரையாடல் ஒன்றினை 12 அன்று ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.
உரிமைகள் – நீதி – செயல் என்ற கருப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலில் அங்கவீனமான பெண்கள் அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்,மற்றும் நில ஆக்கிரமிப்பினால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்,நுண்நிதி கடனினால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்,அரசாங்கம் கொண்டுவரும் திட்டங்களால் பாதிக்கப்படும் பெண்கள் எதிர்ககொள்ளும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் முடிவில் சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
பெண்களின் சாதனைகளை கௌரவிப்பதற்கும், பாலின சமத்துவத்தை முன்னெடுப்பதற்கும், பெண்களின் உரிமைகள் மற்றும் அதிகாரமளித்தலை வலியுறுத்துவதற்கும் இந்த நாள் முக்கியமானதாகும்.
2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தின் மையக்கருத்தாக உரிமைகள், நீதி.செயல் அனைத்துப் பெண்களுக்கும் மற்றும் சிறுமிகளுக்கும் என்பதைக் கொண்டுள்ளது.
பெண்களின் உரிமைகள் குறித்து பேசுவது மட்டும் போதாது; அவற்றை நடைமுறையில் உறுதி செய்யும் செயல்பாடுகள் அவசியம் என்பதை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது. அதேபோல் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தலைமைத்துவ வளர்ச்சிக்கு நாம் வழங்கும் ஆதரவு சமூகத்தின் முழுமையான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை நினைவூட்டுகிறது. இன்றைய உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.




சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam