பெண்களை தவறான தொழிலில் ஈடுபடுத்திய இராணுவ வீரர் கைது
வவுனியா, தேக்கவத்தை பிரதேசத்தில் தங்குமிட விடுதி ஒன்றில் இருந்து ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 30 தோட்டக்கள்,இராணுவ சீருடைக்கு சமமான சீருடையுடன் இராணுவ விசேட படைப்பிரிவின் முன்னாள் வீரர் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள்
குறித்த விடுதியில் பாலியல் தொழில் நிலையங்கள் இயங்குவதாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் முன்னாள் இராணுவ வீரர், விடுதியின் முகாமையாளர், பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த விடுதியில் பெண்கள் நீண்டகாலமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் விடுதி முகாமையாளரும், முன்னாள் இராணுவ வீரரும் பெண்களை இந்த தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அறைக்குள் அமைக்கப்பட்டிருந்த இரகசியமாக வெளியேறும் வழிகள்
விடுதியில் இருந்து அவசரமாக வெளியில் செல்வதற்காக அங்குள்ள அறை ஒன்றில் இரகசியமான சில வெளியேறும் வழிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் மோப்ப நாய்களை பயன்படுத்தி சோதனை நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுனியா மாமடு, ஹெட்டவிரகொல்லாவ மற்றும் அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
