இணைய விளம்பரங்களில் கோடி ரூபாய் பணமோசடியில் சிக்கிய பெண்கள் கும்பல்
இணையம் ஊடாக மக்களை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த ஒரு குழுவை கைது செய்துள்ளதாக மேல் மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தரமான தளபாடங்கள் விற்பனை
சந்தேகநபர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் மற்றும் அவர்களது மைத்துனி ஆகியோர் அடங்குவர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள், தரமான தளபாடங்களை நியாயமான விலையில் விற்பனை செய்வதாகவும், அவற்றுக்கு உத்தரவாதம் வழங்குவதாகவும் இணையத்தளங்களில் விளம்பரங்களைப் பதிவிட்டுள்ளனர்.
இதனை நம்பி நாட்டின் பல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் பணத்தினை வைப்பு செய்துள்ள நிலையில், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை இவர்கள் திட்டமிட்டு மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
விசாரணைகள் தீவிரம்
இந்த குற்றங்களைச் செய்யப்பயன்படுத்தப்பட்ட ஒரு மொபைல் போன், தனியார் வங்கிகளில் இருந்து இரண்டு விசா அட்டைகள் மற்றும் மோசடிப் பணத்தில் ரூ. 87,000/ ஆகியவற்றை சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கு மாகாணத்தின் தெற்கு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் OIC இன்ஸ்பெக்டர் சுமித் ஜெயசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் குழு விசாரணைகளை நடத்தி வருகிறது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam