கொழும்பில் அதிகாலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் பெண்
கொழும்பு, கெசல்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் இன்று அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 32 வயது எனவும், அவரது மேலதிக விபரங்கள் கண்டுபிடிக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறு
இந்தப் பெண்ணுக்கும் மற்றுமொரு நபருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri