பெண் கொடூரமாக வெட்டிக்கொலை - உயிரை மாய்க்க முயன்ற சந்தேகநபர்
மொனராகல, பிபிலை - ரதலியத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரதலியத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கு தகாத உறவில் இருந்த நபருக்கு இடையே ஏற்பட்ட தகராறு நீடித்த நிலையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெண் கொலை
பெண்ணைக் கொலை செய்த பின்னர், சந்தேகநபர் தனது கழுத்தை வெட்டி உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

சந்தேகநபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பிபிலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிபிலை வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பிபிலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.