கொழும்பில் பெண்ணின் கொடூர செயல் - நாயை கொலை செய்தமையால் நேர்ந்த கதி
கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிபிட்டியவில் தெருநாய் ஒன்றை காரால் மோதி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த பெண் எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த 14ஆம் திகதி நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
செல்லப்பிராணி
சந்தேக நபரான பெண் வேண்டுமென்று தனது காரில் தெருநாயை மோதிக் கொலை செய்தமையை சிசிடிவி காட்சிகள் மூலம் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அந்தப் பகுதியில் வசிப்பவர்களின் செல்லப்பிராணியாக இருந்த பிளாக்கி என அன்புடன் அழைக்கப்பட்ட நாயின் மரணம் குறித்து, உள்ளூர்வாசிகள் கொட்டாவ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
அந்தப் முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதுவொரு சாதாரண விபத்தாக இல்லாமல், திட்டமிட்ட வகையில் ஒரு உயிரைப் பறித்ததாக கருதியதால் சந்தேக நபரான பெண்ணை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து, முறைப்பாடு செய்த மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.