பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் இறந்துவிட்டாரா..வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அடியாலா சிறைச்சாலைக்குள் வைத்து கொலை செய்யப்பட்டு விட்டதாக சில சமூக வலைத்தளப் பக்கங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.
ராவல்பிண்டியின் அடியாலா சிறைக்குள் கான் கொல்லப்பட்டதாகக் கூறிய ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட ஒரு ஊடகத்தின் அறிக்கையே இதற்குக் காரணம் என்று சில ஊடக வலைத்தளங்கள் தெரிவித்தன.
இம்ரான் கான் எங்கே
இதனால், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எங்கே இருக்கிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேவேளை, சிறைச்சாலையில், இம்ரான் கானை சந்திக்க வந்த அவரது சகோதரிகளான நோரீன் நியாசி, அலீமா கான் மற்றும் உஸ்மா கான் ஆகியோரை பொலிஸார் தாக்கும் காணொளியும் வெளியாகியதால் தற்போது இந்த விடயம் பேசுபொருளாகியுள்ளது.

“நாங்கள் அமைதியான முறையில்தான் சிறைச்சாலை வாயிலில் போராடினோம்.
எங்கள் சகோதரன் உடல்நிலை பற்றி கவலையாக உள்ளது. திடீரென அங்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு, பஞ்சாப் பொலிஸார் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர்” என்று சகோதரிகளில் ஒருவர் குறிப்பிட்டிருப்பதாகவும் என செய்திகள் வெளியாகியுள்ளது. எனக்கு 71 வயதாகிறது, எனது தலை முடியைப் பிடித்து சாலையில் தரதரவென இழுத்துச் சென்று தரையில் தள்ளினார்கள்.
இதனால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அவரது ஆதரவாளர்களும் சிறை வாயிலில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.
போலிச் செய்தி
ஆனால், கடந்த ஒரு மாத காலத்தில், அவரை யாரும் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. முன்னதாக, கைபர் - பக்துங்க்வா மாகாண முதல்வர், இம்ரான் கானை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.
பிறகு, அஃப்ரிடியும் அவரை சந்திக்க தொடர்ந்து சென்றாலும் பார்க்க முடியவில்லை என்று செய்திகள் வெளியானதால், அவரது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்களும் பரவி வருகின்றது.

இந்த ஆண்டு மே 2025-இலும், இம்ரான் கான் விஷமூட்டப்பட்டார் என்ற போலிச் செய்தி பரவியிருந்தது.
அப்போது பாக்கிஸ்தான் வெளிவிவகார அமைச்சகத்தின் பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட ஒரு ஆவணம் சமூக வலைதளங்களில் பரவியது.
அதும் போலிச் செய்தி என நிரூபிக்கப்பட்டது; அரசாங்கத்திடமிருந்து எந்த உத்தியோகப்பூர்வ உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 8 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan