அநுரவிற்கு பெண்கள் பகிரங்க எச்சரிக்கை! வசமாக சிக்கிய எதிர்க்கட்சி எம்.பி
அநுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதுடன், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பிக்குவிற்கு எதிராக சட்டம் பாகுபாடின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சர், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவர்கள் உரிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கும் சிறைச்சாலையில் இருக்கும் கைதி ஒருவருக்கும் இடையில் தொடர்ச்சியாக 53 தொலைபேசி அழைப்புகள் பரிமாறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சிறைக்கைதி ஒருவரிடமிருந்து கைபேசி கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையின் போது இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி....