பேருந்தில் இளம் பெண்ணிடம் மோசமாக செயற்பட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிபில - மொனராகலை வீதியில் பயணித்த தனியார் பேருந்தொன்றில் பெண் பயணி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மொனராகலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய பெண், பேருந்தில் நின்றுகொண்டு பயணித்த போது இந்த நடத்துனர் அங்க சேட்டையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொலிஸில் முறைப்பாடு
பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு சென்று இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவமனை பொலிஸ் பிரிவில் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட மொனராகலை பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan