யாழில் விபத்தில் சிக்கிய பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஊரெழு பர்வதவர்த்தனி மனோன்மணி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பலாலி வீதியில் நேற்று முன்தினம் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 73 வயதான உமாதேவி கனகநாயகம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் உரும்பிராய் வடக்கு கற்பக விநாயகர் கோவில் கிளை வீதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரிய வந்துள்ளது.
குறித்த பெண்மணி துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது ஊரெழு பர்வதவர்த்தனி மனோன்மணி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பலாலி வீதியில் மஞ்சள் கடவையின் எல்லையில் பின்னால் வேகமாக வந்த பட்டா ரக வாகனம் குறித்த பெண்ணைச் சடுதியாக மோதித் தள்ளியது.
சம்பவத்தில் வயோதிபப் பெண் தூக்கி வீசப்பட்டுத் தலையில் படுகாயமடைந்தார்.
இந்நிலையில் சுயநினைவற்று ஆபத்தான நிலையிலிருந்த குறித்த பெண் யாழ். போதனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 12 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam