மறுக்கப்படும் விவாகரத்து - தலைமறைவாக வாழும் ஆப்கான் பெண்கள்
ஆப்கானிஸ்தானில் விவாகரத்து பெற்ற பெண்களை மீண்டும் தங்கள் முன்னாள் கணவர்களுடன் சேர்ந்து வாழும் படி தாலிபன் அமைப்பினர் கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவாகரத்து பெற்ற கணவருடன் வாழும் பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதாகவும் பற்கள் உடைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
தலிபான்கள் ஆட்சியில் காணப்படும் புதிய சட்ட திட்டங்கள் பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா ஆதரவு
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ஆதரவுடன் நடைபெற்று வந்த கடந்த ஆட்சியில் கணவனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் விவாகரத்து பெற்றிருந்தனர்.
பெண் ஒருவர் தனக்கு நடந்த கொடுமைகளை ஊடகத்திடம் பகிர்ந்துள்ளார், "தாலிபன்கள் மீண்டும் என்னை விவாகரத்து பெற்ற என் கணவனுடன் சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்திய போது நானும் என் மகள்களும் மிகவும் அழுதோம்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் தங்களுக்கு தலிபான் ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை என ஆப்கான் பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.




