உள்நாட்டு யுத்தத்தால் கனடா வந்த பெண்ணுக்கு புலம்பெயர்தல் அலுவலகம் கொடுத்த ஏமாற்றம்-செய்திகளின் தொகுப்பு
எத்தியோப்பியாவின் உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பித்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த பெண் ஒருவர் கனேடிய புலம்பெயர்தல் அலுவலகத்தால் ஏமாற்றப்பட்டுள்ளார்.
23 வயதான ஈடன் செபீன் ( Eden Zebene) என்ற இளம்பெணுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட அன்றே ஒரு அதிர்ச்சியையும் கனேடிய புலம்பெயர்தல் அலுவலகம் கொடுத்துள்ளது.
பணி அனுமதி பெற 16 மாதங்களாக புலம்பெயர்தல் அலுவலகத்துக்கு குறித்த பெண் சென்று வந்துள்ளார். அகதி நிலை கோரியிருந்த அவர் 16 மாதங்கள் தனது தகுதி நேர்காணலுக்கான அழைப்புக்காக காத்திருந்த நிலையில் இறுதியாக அவருக்கு பணி அனுமதி கிடைத்துள்ளது.
இருப்பினும் அவரது பணி அனுமதியில், காலாவதி திகதி ஆகஸ்ட் 6, 2022 என குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, அவருக்கு என்று பணி அனுமதி வழங்கப்பட்டதோ, அன்றே அது காலாவதியாவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பாரிய ஏமாற்றத்துக்கும் உள்ளாகியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
