7வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி
2022ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கமைய, மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை 07ஆவது முறையாகவும் இந்திய அணி வென்றுள்ளது.
நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
இதற்கமைய, இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக இனோகா ரணவீர 18 ஓட்டங்களையும், ஓசாதி ரணசிங்க 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய இலங்கை மகளிர் அணியின் ஏனைய வீராங்கனைகள் 10க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.
இந்திய அணியின் பந்துவீச்சு

பந்துவீச்சில் இந்திய அணியின் ரேனுகா சிங் 03 ஓவர்கள் பந்துவீசி 05 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், 66 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 8.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக ஸ்மிருதி மந்தனா 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் இனோகா ரணவீர 03 ஓவர்கள் பந்துவீசி 17
ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan