பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் பல கோடி ரூபா பணம் - பொலிஸார் அதிரடி நடவடிக்கை
கொழும்பின் புறநகர் பகுதியில் 9 கோடி 37 இலட்சத்து 62 ஆயிரத்து 939 ரூபா பணத்தை இரண்டு வங்கிச் கணக்குகளில் வைப்பிலிட்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தை வைப்பிலிட்ட நிலையில் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம்
சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நிதி கொடுக்கல் வாங்கல்கள் குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான இந்தப் பெண்ணின் பெயரிலுள்ள இரண்டு வங்கிக் கணக்குகளைச் சோதனையிட்ட போது இந்த பணம் வைப்பிலிடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
மேலதிக விசாரணை
அவரது முதலாவது கணக்கில் 7,37,62,939.95 ரூபாயும் இரண்டாவது கணக்கில் 20,000,000 ரூபாயும் வைப்பிலிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri