நள்ளிரவில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு! பெருந்தொகை பணம், நகைகளுடன் சிக்கிய பெண்
பாணந்துறை, மஹாவில பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, வீட்டில் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் சொத்துக்களுடன் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில், நேற்று இரவு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தங்க நகைகள்
அதற்கமைய, 978060 ரூபாய் பணம், தங்க நகைகள் மற்றும் வேன் என்பன பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை, மஹாவில பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan