இலங்கை வந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
இலங்கை வந்த பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
315,000 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் கெகிராவ பகுதியை சேர்ந்த 40 வயதுடையவராகும்.
வீட்டு பணிப்பெண்
அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வீட்டு பணிப்பெண்ணாக செயற்பட்ட நிலையில் இலங்கை வந்துள்ளார்.
நேற்று ஷார்ஜாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு G.9.-502 என்ற கல்ப் ஏர் விமானத்தில் வருகைத்தந்திருந்தார்.
வெளிநாட்டு சிகரெட்டுகள்
பெண்ணின் பொதிகளில் இருந்து 21,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 105 அட்டைப்பெட்டிகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அந்தப் பெண் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.எனினும் சிகரெட் கையிருப்பை சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்தல், கடத்துதல் மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
