வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பிய பெண் விமான நிலையத்தில் கைது
டுபாயில் இருந்து இலங்கை வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 70 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் கைது
டுபாயில் வீட்டுப் பணிப் பெண்ணான பணிபுரிந்த இந்த பெண் வரகாபொல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த பெண் கொண்டு வந்த 04 பயணப் பொதிகளில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட47,000 சிகரெட்டுகள் அடங்கிய 235 அட்டைப்பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிகரட் கையிருப்பு
கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் எதிர்வரும் 9 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன், கைப்பற்றப்பட்ட சிகரட் தொகையும் அன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        