கொழும்பில் குழந்தைகளுக்கான பால் மா திருடிய பெண் கைது
கொழும்பு 7இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் குழந்தைகளுக்கான பால் மா பக்கட்களை திருடிய சந்தேகத்தின் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுமார் ஆறாயிரம் ரூபா பெறுமதியான பால் மா இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்காக இரண்டு பால் மா பக்கட்டுகளை பணம் செலுத்தாது எடுத்துச் சென்ற போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த பெண்ணை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர்.
32 வயதான பெண்
இதன்போது, குறித்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து குருந்துவத்த வைத்தியசாலைக்கு அருகாமையில் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெண்ணிடமிருந்து குழந்தைகளுக்கான இரண்டு பால் மா பக்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 32 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri