உலகப்பரப்பில் பெண்கள் நினைத்து பார்க்க முடியாத வளர்ச்சிகளை கண்டிருக்கிறார்கள்: சிவஞானம் சிறீதரன் (Photos)
உலகப்பரப்பில் இன்று பெண்கள் நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சிகளைக் கண்டிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் மகளிர் அணியின் புதிய நிர்வாகத் தெரிவும் பொதுக்கூட்டமும் இன்று கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.
குறித்த நிகழ்வு இன்று பகல் 10.30 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் கரைச்சி பிரதேச சபைசபையின் உறுப்பினர் கலைவாணி தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் வடக்கு
மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா மற்றும்
கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் செயற்பாட்டாளர்கள் கட்சியின் ஆதரவாளர்கள்
எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,
உலக நாடுகளில் பெண்களின் வகிபாகங்கள் கூடியிருக்கின்றன. உலக நாடுகளில் பெண்கள் பலர் தலைவர்களாக இருக்கிறார்கள். தேர்தல் முறைகளில் கூட மாற்றங்கள் இடம்பெறலாம், வாய்ப்புகள் உண்டு.
இந்த நாட்டில் மாறுகின்ற வாய்ப்புக்களைத் தான் அதிகமாக இருக்கின்றது உலகப் பரப்பில் இன்று பெண்கள் நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சியைக் கண்டுள்ளார்கள். உலக நாடுகளிலும் பெண்கள் பல தலைவர்களாக இருந்திருக்கிறார்கள்.
நெடுந்தீவைச் சேர்ந்த இலங்கையின் முதலாவது உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக செல்லம்மாள் என்ற பெண் தெரிவு செய்யப்பட்டு இருந்திருக்கின்றார்.
அவருடைய பெயரிலேயே அவரது சொந்த காணியில் ஒரு பாடசாலை நிறுவப்பட்டு உள்ளது என அறிந்து கொண்டேன். பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்குள்ளும் பெண்கள் பணியாற்றுகிறார்கள்.
நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்துப் பல துறை சார்ந்தவர்களாகப் போராளிகளாகக் கூட பெண்கள் இருந்திருக்கிறார்கள்.
ஆகவே அந்த அடிப்படையில் பெண்களின் வகிபாகம் என்பது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. எனவே இந்த காலம் முக்கியமானது.
பல அரசியல் நெருக்கடிகளை நாங்கள் சந்தித்தாலும் எங்களுடைய
இலக்கு நோக்கி நாங்கள் பயணிக்க வேண்டும் என அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.




கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 7 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri