பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பி தகாத தொழிலில் ஈடுபடுத்திய பெண்-நீதிமன்றம் விதித்துள்ள தடை
வீட்டுப்பணிப்பெண் வேலைக்கு அனுப்புவதாக கூறி இலங்கையை சேர்ந்த இளம் பெண்களை துபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் மோசடியுடன் தொடர்புடைய பெண்ணொருவர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள நீதிமன்றம் நேற்று தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்தின் உரிமையாளர்

தம்புள்ளை பிரதேசத்தில் இயங்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான ஆஷா திஸாநாயக்க என்ற பெண்ணுக்கே இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் விசாரணை திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க, இந்த தடையை விதித்துள்ளார்.
மேலும் 7 நிறுவனங்கள் தொடர்பில் விரிவான விசாரணை

மிகப் பெரியளவில் முன்னெடுக்கப்படும் இந்த பாலியல் தொழில் சம்பந்தமாக மேலும் 7 வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தொடர்பாக விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
துபாய் மற்றும் ஓமான் போன்ற நாடுகளில் வேலைக்காக சென்று அந்நாடுகளில் அனாதரவாகி, பல்வேறு இன்னல்கள், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்ட சுமார் 50 பெண்கள்,இலங்கை தூதரகங்களின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த பெண்களிடம் வாக்குமூலங்களை பெற்று நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றவியல் விசாரணை திணைக்களம் கூறியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam