மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு (Photos)
தலவாக்கலை - மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 9 மணியளவில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்துள்ள நிலையில் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பலகோணங்களில் விசாரணை முன்னெடுப்பு
மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா அல்லது நீர்த் தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து நீர்த்தேக்கத்தில் தள்ளிவிட்டார்களா என்பது தொடர்பாகப் பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலம் அடையாளம் காண்பதில் சிக்கல்
மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்பட முடியாத அளவுக்கு உருக்குலைந்த நிலையிலேயே காணப்படுகின்றது எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் கூறியுள்ளனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
