கனடாவில் பெண்ணொருவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!
கனடாவில் பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் 22 மில்லியன் டொலர்களை பரிசாக வென்றுள்ளார்.
இந்த பரிசுத் தொகை கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் வென்றெடுக்கப்பட்டுள்ளது.
தானியங்கி அடிப்படையில் கொள்வனவு
ஒன்றாரியோ மாகாணத்தில் கிங்ஸ்டன் பகுதியைச் சேர்ந்த லாவுரி ஸ்கொட் என்ற பெண் இவ்வாறு பல மில்லியன் டொலர்களை வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெண் லொத்தர் சீட்டிலுப்பு நிறுவன சந்தாதாரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தானியங்கி அடிப்படையில் இந்த சீட்டு கொள்வனவு செய்யப்பட்டிருந்தது என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.