ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி
மிரிஹான பிரதேசத்தில் ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் தங்க சங்கிலியை திருடிய தாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு லட்சம் பெறுமதியான தங்க சங்கிலி ஒன்று திருப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் தாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அவரால் திருடப்பட்ட தங்க சங்கிலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எத்துல்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராகும்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு புதிய ஆடை அணிவதற்காக அவரை அறைக்கு அழைத்து செல்லும் போது அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலி திருடப்பட்டுள்ளது.
மிரஹான பொலிஸாரினால் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam