இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண் சந்தித்த திக் திக் நிமிடங்கள்.. கடுகண்ணாவை துயரத்தின் வெளிப்படுத்தல்கள்!
மண்சரிவின் பின்னர் தான் 3 மணிநேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்ததாக கடுகண்ணாவை மண்சரிவு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று (23.11.2025) ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
மண்சரிவு ஏற்பட்ட போது, மரமொன்று முறிந்து விழுகின்றது என்றே நான் நினைத்தேன். இதனையடுத்து, அங்கிருந்து நான் தப்பிக்க முயன்ற போது, இடிபாடுகளுக்குள் சிக்கினேன்.
அதிஷ்டம்
எனது ஒரு கையை மட்டுமே என்னால் அசைக்க முடியுமாக இருந்தது. என்னுடைய அலைபேசியும் அடித்துக்கொண்டே இருந்தது. ஆனால், என்னால் பதிலளிக்க முடியவில்லை.

வெளியில் இருந்தவர்கள் பேசும் சத்தம் எனக்கு கேட்டது. பெக்கோ வைத்து இடித்து விடுவோம் என கூறினார்கள். அப்போது கற்கள் என் மீது விழும் என நான் அஞ்சினேன்.
அதன் பின்னர், எனது கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு அதிஷ்டம் இருந்தால் நான் பிழைத்துக்கொள்வேன் என எண்ணிக்கொண்டேன். இதனையடுத்து, 3 மணிநேரங்களுக்கு பின்னரே நான் மீட்கப்பட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டி - கடுகண்ணாவையில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் 6 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam