பேஸ்புக் காதலால் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி
பலங்கொட, ஹேலகந்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் ஒன்று நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துஷானி பிரியங்கா என்ற திருமணமாகாத இளம் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் அதே பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனுடன் பேஸ்புக் ஊடாக காதல் தொடர்பு ஒன்று ஏற்படுத்தியிருந்தார் என தெரியவந்துள்ளது.
கடந்த 12 நாட்களாக குறித்த யுவதி இளைஞனின் வீட்டில் வாழ்ந்துள்ளார். எனினும் அதுவரையிலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்திருக்கவில்லை.
கடந்த 19ஆம் திகதி இரவு குறித்த இளைஞன் வீட்டில் இல்லாத நிலையில் இளைஞனின் தாயார் யுவதியை இரவு உணவிற்காக அழைத்த போதிலும் அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. அவர் இருந்த அறை மூடப்பட்டிருந்தது.
பின்னர் கதவை உடைத்த போது அவர் கயிறு ஒன்றில் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் கயிற்றை வெட்டி அவரை காப்பாற்ற முயற்சித்ததாக இளைஞனின் தாயார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் பிரேத பரிசோதனையின் போது அவரது கழுத்து கயிற்றில் தொங்கவில்லை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த மரணம் மர்மமாக உள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
