மிஹிந்தலை பகுதியில் பெண் ஒருவர் படுகொலை!
மிஹிந்தலை, தொரமடலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிஹிந்தலை, தொரமடலாவ, மூன்றாம் படியைச் சேர்ந்த ஹேரத் முதியன்சேலாகே என்ற ஸ்ரீஆனி விஜேசிங்க (49) என்ற ஊனமுற்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருமணமாகாத இந்த மாற்றுத்திறனாளி பெண்ணும், அவரது தாயாரும் ஒரே வீட்டில் வசித்து வரும் நிலையில் அவரது தாயார் நேற்று (29.04.2023) ஆம் திகதி வீட்டில் இருந்து கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
சந்தேகநபர் கைது
அன்றைய தினம் மாலை மீண்டும் தாய் வீட்டிற்கு வந்த போது, வீட்டில் நபரொருவர் உள்ளதினை அவதானித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இது குறித்து அயலவர்களிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை அறிந்த பிரதேசவாசிகள் வீட்டிற்கு வந்த சந்தேகநபரை பிடித்து மிஹிந்தலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளியான மகள் இருந்த அறையை சென்று பார்த்து போது குறித்த பெண் நிர்வாணமாக உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.