முன்னணி தனியார் வாடகை கார் நிறுவனம் ஒன்றிற்கு எதிராக வழக்கு தாக்கல்
கொழும்பில், முன்னணி தனியார் வாடகை கார் நிறுவனம் ஒன்றின் வாகன ஓட்டுநர் தன்னை அச்சுறுத்தியதை அடுத்து, அந்த வாடகைக்கார் நிறுவனம் மீது பெண் பயணி ஒருவர் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த பயணி, தமது சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.
வழக்கு தாக்கல்
அதில், நிறுவனங்கள் தமது முகவர்களின் செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2025 ஜூலை 3 ஆம் திகதியன்று, கொழும்பில் உள்ள விசா அலுவலகத்திலிருந்து புறக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கிருந்து புத்தளம் திரும்புவதற்காக குறித்த பெண் பயணி, வாடகைக்கார் ஒன்றை அழைத்துள்ளார்.
எனினும், குறித்த வாடகைக்கார் ஓட்டுநர் நிறுவன தொலைபேசியை தவிர்த்து, தமது தனிப்பட்ட தொலைபேசியில் இருந்து பயணியை மீண்டும் அழைத்துள்ளார்.
கடும் வார்த்தை
இதனையடுத்து, அதனை விரும்பாத பயணி, வேறு ஒரு வாகனத்தை அமர்த்தி தமது பயணத்தை தொடர்ந்துள்ளார்.
இதன்போது, குறித்த பெண் பயணியை அழைத்த வாடகைக்கார் ஓட்டுநர், தம்மை திட்டியதாகவும், தாம் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்து தம்மை கடும் வார்த்தைகளால் திட்டியதாகவும், பயணி குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, தாம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதாகவும் குறித்த பயணி தெரிவித்துள்ளார்.
பெண்ணுக்காக குரல்
எந்தப் பெண்ணும் தாங்கக்கூடாத ஒன்றை தாம் எதிர்கொண்டதாக தெரிவித்துள்ள அவர், ஒரு சட்டத்தரணியாக மாத்திரமல்லாமல், குடிமகளாகவும், தமக்காக மட்டுமல்ல, இந்த நாட்டில் பாதுகாப்பாக உணரத் தகுதியான ஒவ்வொரு பெண்ணுக்காகவும் குரல் கொடுப்பது தமது கடமை என்று அவர் தமது ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பெண்கள் பாதுகாப்பாக உணரத் தகுதியானவர்கள், சட்டம் தம்மை பாதுகாக்கவே உள்ளது எனவே தாம் பயன்படுத்த விரும்புவதாக குறித்த பயணி தமது சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
