கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பரபரப்பை ஏற்படுத்திய நபர்
கொழும்பு - காலி முகத்திடலுக்கு முன்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நபரொருவர் சமிக்ஞை விளக்கு கம்பத்தில் ஏறி குழப்பம் விளைவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள சமிக்ஞை விளக்கு கம்பத்தில் ஏறி தான் ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்து குறித்த நபர் மிரட்டியதால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களின் முயற்சி
குறித்த கம்பத்தில் இருந்து தான் கீழே விழப்போவதாகவும், ஜனாதிபதியை சந்திக்க நிறைய தடவைகள் முயற்சித்ததாகவும், ஆனால், தன்னால் முடியவில்லை எனவும், ஜனாதிபதியை சந்தித்தே ஆக வேண்டும் என்றும் தெரிவித்து அந்த நபர் குழப்பம் விளைவித்த நிலையில், அவரை அங்கிருந்த மக்கள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும், அந்த நபர் கீழே இறங்காமல் தொடர்ந்தும் சமிக்ஞை விளக்கு கம்பத்திலேயே அமர்ந்திருந்த நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டனர்.
இதனையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.



கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
