விடுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பெண்: பொலிஸார் வெளியிட்ட தகவல்
தலங்கமவில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் மருத்துவ உளவியலாளர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுஜாதா முனசிங்க மானாபரன என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் கடந்த 26ஆம் திகதி ஆண் ஒருவருடன் விடுதிக்கு வந்திருப்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
இவருடன் விடுதிக்கு வந்த ஆண் நபர் நேற்று விடுதியை விட்டு வெளியேறி இரவு மீண்டும் வந்ததாகவும் மீண்டும் வெளியே சென்றாரா என்பது நினைவில் இல்லை என விடுதி காசாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
விடுதி பணியாளர்கள்
நேற்று மதியம் முதல் பெண்ணை காணாததால், விடுதி பணியாளர்கள் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, படுக்கையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கடந்த 24 அல்லது 25 ஆம் திகதி குறித்த பெண் விடுதிக்கு வந்தபோது, தன்னிடம் அடையாள அட்டை இல்லை எனவும், ஒரு காகிதத்தில் எழுதப்பட்ட அடையாள அட்டை இலக்கத்தை காசாளரிடம் கொடுத்ததாகவும் அது போலியானதெனவும் தெரியவந்துள்ளது.
1977 என எழுதப்பட்டிருந்தாலும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் வயது அதற்கும் அதிகமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த பெண்
அவரது பயணப் பையில் இருந்த முகவரியொன்றை பரிசோதித்த போது அது ஹப்புத்தளை பகுதியில் உள்ள தங்கும் விடுதியொன்றிற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் இராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் மருத்துவ உளவியல் ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படும் செய்தி அறிக்கைகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
விடுதியில் உள்ள சிசிடிவி கமராக்களும் அணைக்கப்பட்டுள்ளதாகவும் அது இயங்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri