வாகன விபத்தில் இருவர் படுகாயம்: மட்டக்களப்பில் சம்பவம் (Photos)
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் தேற்றாத்தீவு பகுதியில் நேற்று (03.09.2023)மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த வான் ஒன்றும், மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களும், ஒன்றோடு ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இரு மோட்டார் சைக்கிள்களில் தனித் தனியாக பயணித்த இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவர்களில் ஒருவர் மேலதிக சிகிக்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்துச் சம்பவத்தில் வான் மற்றும் இரு மோட்டார் சைக்கிள்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |








சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
