இனிமையான குரலில் பேருந்தில் பாடும் பெண்-வைரலாகும் காணொளி
வறுமை காரணமாக பேருந்துகளில் சிங்கள மொழிப்பாடல்களை பாடி பண உதவியை பெறும் பெண்ணொருவர் சம்பந்தமான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இனிமையான குரலில் பாடும் நபர்களை தெரிவு செய்ய இலத்திரனியல் ஊடகங்களில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறன. அந்த நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் பாடகர்கள், பாடுவதற்கு முன்னர் பல்வேறு பயிற்சிகளை பெற்று பாடல்களை பாடுகின்றனர்.
ஆச்சரியம் தரும் இனிமையான குரல்
எனினும் எந்த பயிற்சிகளையும் பெறாது பேருந்தில் பாடும் இந்த பெண்ணின் குரல் மிக இனிமையாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பேருந்தில் பாடும் இந்த பெண்ணின் குரல் வறுமை காரணமாக வெளியில் தெரியாமல் போனாலும், அந்த பெண்ணின் இனிமையான குரலை கேட்கும் போது மிக ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.