போலி ஆவணங்களை தயாரித்து பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்
கொழும்பில் போலி ஆவணங்களை தயாரித்து சுமார் 30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்றிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போலி ஆவணம்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண் கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவர் ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் சார்ஜென்ட் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் மே 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.