மட்டக்களப்பில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட பெண்! விசாரணைகள் தீவிரம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வானின் விசாரணையை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு அரசடி,பார் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று பிற்பகல் தந்தையும்,மகளும் இணைந்து பெண்னொருவரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன், அணிந்திருந்த நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இதன்போது தந்தையும், மகளும் வீதியில் இரத்த கறையுடன் செல்வதை அவதானித்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் இருவரையும் துரத்திச்சென்று சோதனை செய்தபோது இரத்தம் தோய்ந்த நகைகளும் தோடுகளுடன் இரு காதுகளையும் பையொன்றில் இடப்பட்டுள்ளதை கண்டு இருவரையும் பிடித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இன்று மாலை சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற ஏ.சி.றிஸ்வான் குறித்த கொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும் பணிப்புரை விடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
மட்டக்களப்பில் பட்டப் பகலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! சம்பவ இடத்தில் பதற்ற நிலை





தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 9 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri