காதலனால் கொலைச் செய்யப்பட்ட பெண்: தீவிரப்படுத்தப்படும் விசாரணை
பதுளை - பிபில, ரதலியத்த பிரதேசத்தில் தகாத உறவில் இருந்த பெண்ணொருவர் காதலனால் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(28.01.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபில, ரதலியத்த பிரதேசத்தில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபரும் தனது கழுத்தை வெட்டிக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
இவ்வாறு உயிரிழந்த பெண், 40 வயதுடைய ரதலியத்த, பிபில பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண், தகாத உறவில் இருந்துள்ளார் என்றும், அவருடைய காதலனுக்கும் பெண்ணுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பிபில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.