லங்காபுர பிரதேச செயலக பெண் அதிகாரி கொலை தொடர்பில் கணவன் கைது
பொலன்நறுவை லங்கபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரியான பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரியான பெண் நேற்று அதிகாலை 2.45 அளவில் அவரது வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டிருந்தார்.
தாக்குதலில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. 42 வயதான இந்த பெண் அதிகாரி படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
யாரோ ஒருவர் வீட்டில் இருந்தார்:இருளில் அடையாளம் தெரியவில்லை
சம்பவம் நடந்த நேரத்தில் பெண்ணின் கணவன் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளும் பெண்ணுடன் வீட்டில் இருந்துள்ளனர்.
யாரோ ஒருவர் வீட்டின் அறையில் இருந்தார் எனவும் இருள் காரணமாக அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை என கணவன் நேற்று பொலிஸாரிடம் கூறியிருந்தார்.
இந்த நிலையில் விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கணவனை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.