பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரி வெட்டி கொலை
பொலன்நறுவை லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரியான பெண்ணொருவர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக லங்காபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பெண்ணின் வீட்டில் நடந்துள்ளது. பொலன்நறுவை தல்பொத்த என்ற இடத்தில் வசித்து வந்த 42 வயதான எம்.எல்.யமுனா பத்மினி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தும் பொலிஸார்
கொலை சம்பவம் நடக்கும் போது பெண்ணின் கணவரும், பிள்ளைகளும் வீட்டில் இருந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பெண்ணை கொலை செய்தது யார், எந்த காரணத்திற்காக கொலை செய்தனர் என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலன்நறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஓஷான் ஹேவாவித்தாரணவின் உத்தரவின் பேரில் சிறப்பு பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.