வெலிகந்தை பிரதேசத்தில் மா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் ஓருவர் பலி
வெலிகந்தை பிரதேசத்தில் மா அரைக்கும் இயந்திரத்தில் தவறுதலாக கூந்தல் சிக்கிக்கொண்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது வெலிக்கந்தை, மஹிந்தாகம, கடவத்தமடு கிராமத்தில் வசிக்கும் சந்திரிகா (வயது 39) எனும் பெண்ணே இவ்வாறு பலியாகியுள்ளார்.
குறித்த பெண் தனது வீட்டில் சுயதொழிலுக்காக மா அரைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவரது கூந்தல் மா அரைக்கும் இயந்திரத்தில் சிக்குண்டு இயந்திரத்தினால் பலமாகச் சுழற்றப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இதன்போது உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிக்கந்தைப் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வெலிக்கந்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam