அம்பாறையில் தமிழ்ப்பெண் படுகொலை.. யாழிற்கு விரையும் சிஐடி அதிகாரிகள்

Sri Lanka Police Ampara Jaffna
By Farook Sihan Sep 06, 2025 11:58 PM GMT
Report

அம்பாறையில் குடும்பபெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் தலைமறைவாகியுள்ள நகைக்கடை உரிமையாளரை கைது செய்வதற்காக D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் யாழ்ப்பாணம் நோக்கி பயணமாகியுள்ளனர்.

பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்ற குடும்பப்பெண் கடந்த மே மாதம் வெள்ளிக்கிழமை (30) படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் கடந்த ஜுன் மாதம் 25ஆந் திகதி சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் குறித்த குடும்பப் பெண்ணின் வீட்டில் பணிப்பெண்களாக பணியாற்றிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்த பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.

சோரம் போன அரசியலை மீட்டெடுக்க விடுதலை புலிகளின் தலைவரின் பெயரை பயன்படுத்தும் சிங்கள அரசியல்வாதிகள்..

சோரம் போன அரசியலை மீட்டெடுக்க விடுதலை புலிகளின் தலைவரின் பெயரை பயன்படுத்தும் சிங்கள அரசியல்வாதிகள்..

பிரதான சந்தேகநபர் 

குறித்த கைது நடவடிக்கை, படுகொலை நடைபெற்று 24 நாட்களின் பின்னர் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு குறித்த படுகொலை தொடர்பில் 34 வயதுடைய இரட்டையரான சகோதரிகளை கைது செய்தனர். 

அம்பாறையில் தமிழ்ப்பெண் படுகொலை.. யாழிற்கு விரையும் சிஐடி அதிகாரிகள் | Woman Killed Ampara Police Investigate In Jaffna

இந்நிலையில் குறித்த விசாரணையில் ஏதோ ஒரு அடிப்படையில் தொய்வு ஏற்பட்டதை உணர்ந்த படுகொலை செய்யப்பட்ட குடும்பப்பெண்ணின் கணவர் நாட்டின் ஜனாதிபதி உட்பட பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வு பிரிவினர் என பல தரப்பினருக்கு உரிய நீதி கோரி கடிதம் ஒன்றினை எழுதி உரிய படுகொலையின் சூத்திரதாரிகள் என நம்பப்படும் பலரது பெயரினை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி இருந்தார்.

இதற்கமைய மீண்டும் துரிதமாக செயற்பட்ட D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் நீண்ட பல்வேறு வடிங்களில் விசாரணைகளை முன்னெடுத்து களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் தான் இப்படுகொலையின் பிரதான சூத்தரதாரி என கண்டறிந்துள்ளதுடன் குறித்த கடையில் பணியாற்றிய உரிமையாளரின் சகோதரர் உட்பட அக்கடையின் நம்பிக்கைக்குரிய பணியாளரையும் வெள்ளிக்கிழமை (05) கைது செய்தனர்.

இக்கைது நடவடிக்கையை அறிந்த பிரதான சந்தேக நபர் தற்போது அவரது சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு தப்பி சென்ற நிலையில் அச்சந்தேக நபரை தேடி D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்றுள்ளனர்.

இதே வேளை தப்பி சென்ற பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டதுடன் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரின் தங்கையை திருமணம் செய்து பெரிய நீலாவணையில் வசித்து வந்தவராவார்.

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் சிம்பாப்வே வெற்றி

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் சிம்பாப்வே வெற்றி

சி.சி.டிவி கெமரா

இச்சந்தேக நபரே நீண்ட காலமாக குறித்த கொலை திட்டம் தீட்டி அரங்கேற்றியுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. மேலும் 94 நாட்களின் பின்னர் கைதான பிரதான சூத்தரதாரியின் கடையில் பணியாற்றிய சூத்தரதாரியின் சகோதரர் உட்பட அக்கடையின் நம்பிக்கைக்குரிய பணியாளரையும் அம்பாறைக்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறையில் தமிழ்ப்பெண் படுகொலை.. யாழிற்கு விரையும் சிஐடி அதிகாரிகள் | Woman Killed Ampara Police Investigate In Jaffna

38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் மீது கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்படக் கூடிய வகையில் வெட்டப்பட்டு தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்திருந்தது.

மேலும், இப்படுகொலை இடம்பெற்ற வேளை மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கி இருந்ததுடன் சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கெமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டிருந்தது. 

இது தவிர படுகொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணின் கடந்த கால கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மிக நீண்ட விசாரணை மேற்கொண்டு அவற்றை மீள தன்னிடம் பெற்று வழங்கியதற்காகவும் துரித கதியில் கொலையாளிகளை இனங்கண்டு பாதிக்கப்பட்ட எங்கள் தரப்பினருக்கு பல்வேறு உதவிகளை வழங்கியதற்காக படுகொலையான பெண்ணின் கணவர் உருக்கமாக நன்றிகளை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாருக்கு தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

மன்னாரில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சகோதரர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை

மன்னாரில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சகோதரர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US