பிரித்தானியாவில் பெற்றோரின் சடலங்களை நீண்டகாலம் மறைத்து வைத்திருந்த பெண்ணுக்கு சிறைதண்டனை
பிரித்தானியாவில் பெற்றோரை கொலை செய்து விட்டு அவர்களின் உடலங்களை
மறைத்து வைத்திருந்த பெண்ணுக்கு குறைந்தது 36 வருடங்களுக்கு ஆயுட்கால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் செம்ஸ்ஃபோர்ட் (Chelmsford) பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் 36 வயதான வர்ஜீனியா மெக்கல்லோ (Virginia McCullough) என்பவர், 70 வயதான தந்தையையும் 71 வயதான தாயாரையும் தாக்கி கொலை செய்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பெண்ணால் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் அவரின் பெற்றோர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
4 வருடங்கள்
மேலும், இருவரின் சடலங்களையும் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு தன்னுடனே மறைத்து வைத்திருந்த நிலையில் கடந்த 2023இல் ஆண்டில் அவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் பின்னரே பெண்ணின் பெற்றோர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இதற்கமைய, பெண் கைது செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளில் தாம் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
பணம் செலவழிப்பு
மேலும், அவரின் பெற்றோரின் ஊழியர் சேமலாப நிதியில் ஒருபகுதி பணத்தை அவர் செலவிட்டுள்ளதாகவும் அவர்களின் கடனட்டைகளையும் பயன்படுத்தி பணத்தை செலவிட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.
விசாரணைகளை தொடர்ந்து, அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போது அந்த பெண்ணுக்கு குறைந்தது 36 வருடங்களுக்கு ஆயுட்கால சிறைதண்டனை விதிக்ககுமாறு நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |