வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்
வவுனியா - மன்னார் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம் புதிய சாளம்பைக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் பின்புறமாக பயணித்த பிளசர் ரக மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்தை முந்தி செல்ல முற்பட்ட போது உழவு இயந்திரத்தின் பின் பகுதியிலுள்ள கலப்பையில் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிக்குளத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
