வடமராட்சியில் விபத்து! பெண் படுகாயம்
யாழ்ப்பாணம் - வடமராட்சியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி - குஞ்சர்கடை மண்டான் வீதியில் இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய எஸ்.சிவகலா என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குஞ்சர் கடையிலிருந்து மண்டான் வீதிக்குச் செல்லும் இடத்தில் மோட்டார் சையிக்கிலும், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் விபத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்!





Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
