ஹோட்டலுக்குள் நடந்த மர்மம்: பெண் உட்பட இரண்டு சடலங்கள் மீட்பு
அம்பாறை - பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண்ணும் மற்றைய நபரும் நேற்று (12) அறை விடுதியில் தங்கியிருந்த நிலையில், மாலை 5.00 மணி ஆகியும் இருவரும் அறையை விட்டு வெளியே வராததால், ஹோட்டல் உரிமையாளர் அறுகம்பே சுற்றுலாப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பொலிஸார் விசாரணை
இதனை தொடர்ந்து பொலிஸார் வந்து அறையின் கதவை உடைத்து பாரத்த போது பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

மேலும் குறித்த பெண்ணை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதற்கமைய, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam