கப் வாகனம் மோதி பெண் ஒருவர் மரணம்
பதுளை - மஹியங்கனை பகுதியில் நடந்த வாகன விபத்தொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(04.07.2025) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
புன்சிரிகம, படல்கும்புர பகுதியை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணே இதன்போது உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிஹொட்டாவில உணவகத்திற்கு முன்பாக பிபிலவில் இருந்து மஹியங்கனை நோக்கிச் சென்று கொண்டிருந்த கப் வாகனம் ஒன்று வீதியில் பயணித்த பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
